பாகற்காய்

பாகற்காய் இலையை அரைத்துச் சாறு எடுத்து ஆசனவாய்ப் புண்களில் தடவி வந்தால்  புண்கள் விரைவில்  குணமாகும்.

பாகற்காய் சாறு(500 மில்லி), அதில் ஒமத்தை (150 கிராம்) ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால்  பெருவயிறு கரையும்.

பாகற்காயை  வெய்யிலில்  காயவைத்துப் பொடி செய்து, தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.

பாகற்காயின் விதையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.

பாகற்காய் சாற்றில் வெந்தயத்தல ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து தினமும் சாப்பிடாடு வந்தால் குடல் நோய்கள், சர்க்கரை நோய், உடல் பலவீனம் போன்றவை குணமாகும்.

பாகற்காயில் 'பீட்டா-கரோட்டின்' மற்றும் 'வைட்டமின் ஏ' உள்ளதால், கண் சம்மந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது. மேலும் இதில் உள்ள 'வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால்  மூட்டு வலி வராது.

No comments:

Post a Comment