அதிகாலையில் தண்ணீர் பருகினால் வியாதிகளை விரட்டலாம்



தினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.
இம் முறையை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பின்பற்றி வந்துள்ளார்கள். அவர்கள் தண்ணீருக்குப் பதிலாக பழந்தண்ணீரை (சோற்றுப் பானைக்குள் எஞ்சிய சோற்றிக்குள் விட்டு வைத்த நீர்) குடித்துவிட்டு தோட்டத்திற்கோ, வேறு தொழில்களுக்ககோ செல்வார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்பொழுது நாகரீக உலகில் அவையெல்லாம் அநாகரிகமாக கணிக்கப்பெற்று கட்டிலில் தேனீர் (Bed tea) அருந்தும் வழக்கம் முன்னெடுக்கப் பெற்று நாம்மெல்லாம் நோயாளிகளாகி வருகின்றோம்.
நாம் நித்திரையில் இருக்கும்போது வாய்மூலம் உடலினுள் புகும் நோய் கிருமிகளை அழிப்பதற்காக வாயினுள் பல நோய் எதிப்பு சுரப்புகள் சுரப்பதாகவும், அவை நாம் நித்திரை விட்டெழுந்ததும் வாய் கழுவாது நீர் பருக்கும் போது உடலினுள் சென்று பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக மாறுகின்றன எனவும் அறிய முடிகின்றது. வாய் கழுவாது காலையில் நீர் குடிப்பவர்கள் கட்டாயம் நித்திரைக்குச் செல்லும்போது பல் துலக்கி வாயை சுத்தமாக வைத்திருத்தல் அவசியமாகின்றது.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள்,
மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
மருத்துவ முறை

1. காலையில் துயில் நீங்கி நீங்கள் எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.
2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.
3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், மதிய போசனம் இராப் போசனத்தின் போதும் 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, or lunch and dinner do not eat or drink anything for 2 hours)
5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.
இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது மேலும் கடுமையாகாது மட்டுப் படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உயர் இரத்த அழுத்தம் – 30 நாட்கள்
வாய்வுக் கோளாறுகள் – 10 நாட்கள்
சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி – 30 நாட்கள்
மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) – 10 நாட்கள்
புற்றுநோய் – 180 நாட்கள்
காச நோய் – 90 நாட்கள்.
ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.
பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.
நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். ”நீரின்றி அமையாது உலகு” என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம்.

உணவு உண்ட உடனே வேண்டாம் இந்த 7 பழக்கங்கள்!!!

1. புகைப்பிடித்தல்:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKDDHtc7ZRzWgYpYpIOMjqCZaguci8lh4grofwAh9fYpQHjfARKK_Cj2lsRwmnZMnSUzDl003W3dTyoCWx07jDXBOiBNrBLJA9n4NkxFFE82EorrHbw6VNEGguXzGgL9s1jQ-itrGO3a9-/s200/eat_fruits_properly_01%255B1%255D.jpgஉணவு  உண்ட  பின்  புகைப்பிடித்தல் என்பது  கிட்டத்தட்ட   பத்து   சிகிரெட்டை தொடர்ச்சியாக புகைப்பிடிப்பதற்குச் சமம்.  மேலும் கேன்சருக்கு அதிகளவு வாய்ப்பு.
 2. பழங்கள் உண்பது:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSUg7b6dJE_9WEpc9o2om2apdPHOg0iUOXgnatAURt3JmqDutJU15Xsydz4aisuDvRbkKg99hXUA7P9300j_lsyyXfOXNSYPKcZewjuSiRpeWsLBpdSdhxPJ1uSVY2MDxV4DqXCTDeXKu7/s1600/tea%255B1%255D.jpgஉணவு உண்ட உடனே பழங்கள் உண்பதால், வயிறு காற்றினால் பருக்கும். இதனால் செரிமானம் தாமதமாகும்.  எனவே 1 மணி அல்லது 2 மணி நேரம் கழித்தோ அல்லது உணவு உண்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு உண்பது நல்லது.
 3. டீ அருந்துவது:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEik6DfVtSJ4vFkvPhUJsNo9n3fzg9EohsMq6cY9ybAKGF8KU8_4nL5-xNbCh0CA1XV_ABaNXCJeUqkBgNGgvPkg4hI4WG5Fg_MQnUVl0Ile03vuMH3zSerZI4ZBLGgvyS4LTgdV0q-ohCR2/s200/getty_rm_photo_of_tight_belt%255B1%255D.jpgதேயிலையில் அதிக அளவு அமிலத்தன்மை  இருப்பதால், நாம் உண்ட உணவில் இருக்கும் புரதத்தை செரிப்பதை தாமதமாக்கும்.  
4. பெல்டை தளர்வு செய்வது:
உணவு உண்ட உடன் பெல்டை தளர்வு செய்தால் குடல் சுற்று அல்லது ஏற்றம் வாய்ப்பு உண்டு.
 5. குளித்தல்:
உணவு உண்ட உடன் குளிப்பதால், இரத்த ஓட்டம் வேகமாக கைகளுக்கும், கால்களுக்கும், உடலுக்கும் செலுத்தப்படும்.  இதனால் வயிற்றுப் பகுதிக்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவு குறைக்கப்படும்.  இதனால் செரிமானம் தாமதமாகும்.  
 6. நடைப் பயிற்சியில் ஈடுபடுவது:
பொதுவாக நாம் கேள்விபட்டிருப்போம்   உணவு உண்ட உடன்  நூறு அடி நடந்தால் 99 வயது வரை உயிர் வாழலாம் என்பதுபோல்.  ஆனால் இது உண்மை கிடையாது.  உணவு உண்ட உடன்  நடைப் பயிற்சியில்  ஈடுபட்டால் நாம் உண்ட உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம்முடைய உடலுக்கு கிடைக்காமல் தடுக்கப்படும்.
7. உறங்குவது:
உணவு உண்ட உடன்  உறங்குவதால் நாம் உண்ட உணவு செரிமானத்திற்கு தாமதமாகும்.  மேலும் வாய்வு பிரச்சனைகள் ஏற்படும்.  குடலில் தொற்று நோய்கள் ஏற்படும்.