அதிகாலையில் தண்ணீர் பருகினால் வியாதிகளை விரட்டலாம்



தினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.
இம் முறையை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பின்பற்றி வந்துள்ளார்கள். அவர்கள் தண்ணீருக்குப் பதிலாக பழந்தண்ணீரை (சோற்றுப் பானைக்குள் எஞ்சிய சோற்றிக்குள் விட்டு வைத்த நீர்) குடித்துவிட்டு தோட்டத்திற்கோ, வேறு தொழில்களுக்ககோ செல்வார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்பொழுது நாகரீக உலகில் அவையெல்லாம் அநாகரிகமாக கணிக்கப்பெற்று கட்டிலில் தேனீர் (Bed tea) அருந்தும் வழக்கம் முன்னெடுக்கப் பெற்று நாம்மெல்லாம் நோயாளிகளாகி வருகின்றோம்.
நாம் நித்திரையில் இருக்கும்போது வாய்மூலம் உடலினுள் புகும் நோய் கிருமிகளை அழிப்பதற்காக வாயினுள் பல நோய் எதிப்பு சுரப்புகள் சுரப்பதாகவும், அவை நாம் நித்திரை விட்டெழுந்ததும் வாய் கழுவாது நீர் பருக்கும் போது உடலினுள் சென்று பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக மாறுகின்றன எனவும் அறிய முடிகின்றது. வாய் கழுவாது காலையில் நீர் குடிப்பவர்கள் கட்டாயம் நித்திரைக்குச் செல்லும்போது பல் துலக்கி வாயை சுத்தமாக வைத்திருத்தல் அவசியமாகின்றது.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள்,
மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
மருத்துவ முறை

1. காலையில் துயில் நீங்கி நீங்கள் எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.
2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.
3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், மதிய போசனம் இராப் போசனத்தின் போதும் 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, or lunch and dinner do not eat or drink anything for 2 hours)
5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.
இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது மேலும் கடுமையாகாது மட்டுப் படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உயர் இரத்த அழுத்தம் – 30 நாட்கள்
வாய்வுக் கோளாறுகள் – 10 நாட்கள்
சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி – 30 நாட்கள்
மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) – 10 நாட்கள்
புற்றுநோய் – 180 நாட்கள்
காச நோய் – 90 நாட்கள்.
ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.
பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.
நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். ”நீரின்றி அமையாது உலகு” என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம்.

உணவு உண்ட உடனே வேண்டாம் இந்த 7 பழக்கங்கள்!!!

1. புகைப்பிடித்தல்:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKDDHtc7ZRzWgYpYpIOMjqCZaguci8lh4grofwAh9fYpQHjfARKK_Cj2lsRwmnZMnSUzDl003W3dTyoCWx07jDXBOiBNrBLJA9n4NkxFFE82EorrHbw6VNEGguXzGgL9s1jQ-itrGO3a9-/s200/eat_fruits_properly_01%255B1%255D.jpgஉணவு  உண்ட  பின்  புகைப்பிடித்தல் என்பது  கிட்டத்தட்ட   பத்து   சிகிரெட்டை தொடர்ச்சியாக புகைப்பிடிப்பதற்குச் சமம்.  மேலும் கேன்சருக்கு அதிகளவு வாய்ப்பு.
 2. பழங்கள் உண்பது:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSUg7b6dJE_9WEpc9o2om2apdPHOg0iUOXgnatAURt3JmqDutJU15Xsydz4aisuDvRbkKg99hXUA7P9300j_lsyyXfOXNSYPKcZewjuSiRpeWsLBpdSdhxPJ1uSVY2MDxV4DqXCTDeXKu7/s1600/tea%255B1%255D.jpgஉணவு உண்ட உடனே பழங்கள் உண்பதால், வயிறு காற்றினால் பருக்கும். இதனால் செரிமானம் தாமதமாகும்.  எனவே 1 மணி அல்லது 2 மணி நேரம் கழித்தோ அல்லது உணவு உண்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு உண்பது நல்லது.
 3. டீ அருந்துவது:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEik6DfVtSJ4vFkvPhUJsNo9n3fzg9EohsMq6cY9ybAKGF8KU8_4nL5-xNbCh0CA1XV_ABaNXCJeUqkBgNGgvPkg4hI4WG5Fg_MQnUVl0Ile03vuMH3zSerZI4ZBLGgvyS4LTgdV0q-ohCR2/s200/getty_rm_photo_of_tight_belt%255B1%255D.jpgதேயிலையில் அதிக அளவு அமிலத்தன்மை  இருப்பதால், நாம் உண்ட உணவில் இருக்கும் புரதத்தை செரிப்பதை தாமதமாக்கும்.  
4. பெல்டை தளர்வு செய்வது:
உணவு உண்ட உடன் பெல்டை தளர்வு செய்தால் குடல் சுற்று அல்லது ஏற்றம் வாய்ப்பு உண்டு.
 5. குளித்தல்:
உணவு உண்ட உடன் குளிப்பதால், இரத்த ஓட்டம் வேகமாக கைகளுக்கும், கால்களுக்கும், உடலுக்கும் செலுத்தப்படும்.  இதனால் வயிற்றுப் பகுதிக்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவு குறைக்கப்படும்.  இதனால் செரிமானம் தாமதமாகும்.  
 6. நடைப் பயிற்சியில் ஈடுபடுவது:
பொதுவாக நாம் கேள்விபட்டிருப்போம்   உணவு உண்ட உடன்  நூறு அடி நடந்தால் 99 வயது வரை உயிர் வாழலாம் என்பதுபோல்.  ஆனால் இது உண்மை கிடையாது.  உணவு உண்ட உடன்  நடைப் பயிற்சியில்  ஈடுபட்டால் நாம் உண்ட உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம்முடைய உடலுக்கு கிடைக்காமல் தடுக்கப்படும்.
7. உறங்குவது:
உணவு உண்ட உடன்  உறங்குவதால் நாம் உண்ட உணவு செரிமானத்திற்கு தாமதமாகும்.  மேலும் வாய்வு பிரச்சனைகள் ஏற்படும்.  குடலில் தொற்று நோய்கள் ஏற்படும்.

உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி?

படிக்கத் துவங்குமுன் ஒரு சில வார்த்தைகள். கலப்படத்தைக் கண்டுபிடிப்பதற்கென இங்கே விவரிக்கப்படுகிற வழிகள் எல்லாம் முடிவானவை என்று சொல்வதற்கில்லை.
 கலப்படத்தைக் கண்டு பிடிக்கும் முறையான ஒரு ஆய்வகம் தரும் ஆராய்ச்சி முடிவுகளுக்கு இவை ஈடாகாது.
உணவு குறித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதைப் போன்றே கலப்படமும், மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அக்கலப்படத்தை இனங்கண்டு கொள்வதற்க ஓரளவு இங்கே வழி செய்யப்பட்டுள்ளதேயொழிய, இனிமேல் வரக்கூடிய கலப்படத்தைப் பற்றி எதுவும் இங்கே கூறவில்லை. தோற்றத்திலோ அல்லது குணத்திலோ ஓரளவு ஒத்திருக்கும் சில கலப்படப் பொருட்களை தேடிப்பிடித்து உணவுப் பொருட்களில் கலப்படத்தைச் பெருக்கி வருகின்றனர் சில வணிகர்கள். அவற்றைத் தடுக்கும் சிறு முயற்சி இது.
எனவே நுகர்வோர் இந்த வழிகளைப் பயன்படுத்துவதன் மூலம் கலப்படப் பொருளை கண்டறிவதில், ஒரு சாதகமான அல்லது பாதகமான தீர்வு ஏற்பட்டது என்பதற்காக, ஒரு பொருள் கலப்படமானது அல்லது தரமானது என்று அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது.
குறிப்பிட்ட உணவுப் பொருளில் கலப்படம் செய்யப் பட்டள்ளதா என்று, மேலோட்டமாக அறிவதற்கான வழிவகைகளே இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
எனவே கலப்படமான பொருள் என்று இறுதியாகச் சொல்வதற்கு ஒரு ஆய்வகமே தகுதி படைத்தது ஆகும்.
1.உணவுப் பொருளின் பெயர் : நெய் அல்லது வெண்ணெய்
கலப்படப்பொருள் : வனஸ்பதி
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
ஒரு சோதனைக் குழாயில் ஒரு தேக்கரண்டி உருகிய நெய் அல்லது வெண்ணெய் மற்றும் அதே அளவுக்கு அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அக்கலவையில் ஒரு சிட்டிகை சர்க்கரையைச் சேர்த்து ஒரு நிமிட நேரம் நன்கு குலுக்கவும். பின்னர் ஐந்து நிமிட நேரம் அப்படியே வைத்திருக்கவும். சோதனைக் குழாயின் அடியில் ஊதாநிறம் அல்லது கருஞ்சிவப்பு நிற அமிலப் படிவு காணப்பட்டால் அதில் வனஸ்பதி கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணரலாம்.
முன் எச்சரிக்கை : வனஸ்பதி பொருள் கட்டாயமாக நல்லெண்ணெய் கலக்கப்பட வேண்டும் என்பதை கண்டறிய இச்சோதனை மிகவும் ஏற்றது. சில நிலக்கரி தார் சாயங்களும் இச்சோதனைக்கு இதே முடிவைத்தரும்.
கலப்படப்பொருள் : கூழாக்கப்பட்ட உருளைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு மற்றும் பிற மாவு வகைகள்.
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
வெண்ணெயில் உருளைக்கிழங்கு அல்லது வள்ளிக் கிழங்கின் கூழ் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் விடவும். பழுப்புநிறமுள்ள டிஞ்சர் அயோடின் நீல நிறமாக மாறினால் கலப்படம் நடந்திருக்கிறது என்று பொருள்.
முன் எச்சரிக்கை : இந்தசோதனை கொழுப்பு நீக்கப்பட்ட பால் அல்லது அடர்த்தி கொடுக்கக் கூடிய பொருட்கள் கலந்த பால் இவற்றுக்குப் பொருந்தாது.
2.உணவுப் பொருளின் பெயர் : பால்
கலப்படப்பொருள் : தண்ணீர்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
1. லாக்டோமீட்டரால் பாலின் அடர்த்தியைக் காண வேண்டும. அது எண். 1.026க்கு மூழ்கிருந்தால் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பது புலனாகும்.
2. ஒரு பளபளப்பான பரப்பைச் செங்குத்தாக வைத்து ஒரு சொட்டு பால் விடவும். சுத்தமான பால் இலேசாக நகரும் அல்லது அப்படியே நிற்கும். கலப்படப் பால் எந்த ஒரு வீழ்படிவம் இல்லாமல் வேகமாக ஓடிவிடும்.
கலப்படப்பொருள் : மாவுப்பொருள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
பாலில் சிறிதளவு டிஞ்சர் அயோடினைச் சேர்க்கவும். அது நிறம் மாறி நீலநிறமானால் மாவுப் பொருள் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை புரிந்து கொள்ளலாம்.
3.உணவுப் பொருளின் பெயர் : கோவா
கலப்படப்பொருள் : மாவுப் பொருள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
மேலே சொன்னவாறு இதற்கும் செய்யவும்.
4.உணவுப் பொருளின் பெயர் : சமையல் எண்ணெய்
கலப்படப்பொருள் : நாய் கடுகு எண்ணெய்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சிறிதளவு மாதிரி எண்ணெயில் ஒரு சில துளிகள் அடர் நைட்ரிக் அமிலம் விட்டு, ஜாக்கிரதையாகக் குலுக்கவும். அமிலப்படிவம் சிவப்பில் இருந்து செம்பழுப்பு நிறத்தில் தோன்றினால் அதில் நாய் கடுகு எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டு இருக்கிறது என்பது பொருளாகும்.
5.உணவுப் பொருளின் பெயர் : சமையல் எண்ணெய்
கலப்படப்பொருள் : தாதுப்பொருள் எண்ணெய்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
இரண்டு மில்லி மாதிரி எண்ணெயுடன் அதே அளவு எண் 2 ஆல்காலிக் பொட்டாஸைச் சேரக்கவும். அக்கலவையை சுமார் 15 நிமிடங்கள் கொதி நீரில் சூடுபடுத்திவிட்டு அதில் 10 மில்லி தண்ணீரைக் கலக்கவும். ஏதேனும் கலங்கல் தென்பட்டால் தாதுப்பொருள் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டு இருக்கிறது என்று பொருள்.
முன் எச்சரிக்கை :
இந்த சோதனைகள் குறைந்த அளவில் செய்யப்பட்டு உள்ள கலப்படத்தைக கண்டுபிடிப்பதற்கு அல்ல.
கலப்படப்பொருள் : விளக்கெண்ணெய்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
ஒரு சோதனைக் குழாயில் சிறிதளவு எண்ணெயுடன் கொஞ்சம் பெட்ரோலியம் ஈதரை விட்டுக் கரைக்கவும். அக்கலவையை உறை பனி கலவைக்கு நடுவில் வைத்து சிறிது நேரம் குளிர வைக்கவும். ஐந்து நிமிடத்தில் கலங்கல் தென்பட்டால் விளக்கண்ணெய் கலப்படம் செய்யப்பட்டிருப்பது விளங்கும்.
6.உணவுப் பொருளின் பெயர் :. இனிப்பு, ஐஸ்கிரீம், சர்பத் முதலியன.
கலப்படப்பொருள் : மெடானில் எல்லோ (இது ஒரு அனுமதிக்கப்படாத நிலக்கரித்தாரின் சாயம்)
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
சம்பந்தப்பட்ட பொருளில் இருந்து வெதுவெதுப்பான தண்ணீரை விட்டு சாயத்தை தனியாக எடுக்கவும். சில துளிகள் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை விடும் போது மெஜந்தர் சிவப்பு நிறம்தோன்றுமானால் மெடானில் எல்லோ என்ற சாயம் கலப்படம் செய்யப்பட்டு உள்ளது என்பதாகும்.
7.உணவுப் பொருளின் பெயர் : பருப்பு வகைகள்
கலப்படப்பொருள் : கேசரி பருப்பு
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : பருப்பின் மீது 50 மில்லி நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை விட்டு, 15 நிமிடம் நீரில் வைக்கவும். அப்போது இளஞ்சிவப்பு நிறம் தோன்று மானால் கேசரி பருப்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பதாகப் பொருள்.
முன் எச்சரிக்கை :
இந்த சோதனை கேசரிப் பருப்பை கண்டுபிடிக்க மட்டுமே உதவும்.
உணவுப் பொருளின் பெயர் : பருப்பு வகைகள்
கலப்படப்பொருள்: களிமண், சிறு கற்கள், சரளைக்கற்கள் போன்றவை (கால்சியம் குரோமேட் மஞ்சள்)
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : இவற்றைச் சற்று கூர்ந்து பார்த்தே கண்டுபிடித்து விடலாம். 5 மில்லி நீருடன் 5 கிராம் பருப்பைச் சேர்த்து அதில் ஒரு சில துளிகள் ஹைட்ரோ குளோரிக் அமிலம் விடவும். அப்போது இளஞ்சிவப்பு நிறம் தோன்றுமானால் கலப்படம் நடந்துள்ளதை அறியலாம்.
8.உணவுப் பொருளின் பெயர் :. பெருங்காயம்
கலப்படப்பொருள் :மாக்கல்லின் தூள் அல்லது மண் சம்பந்தப்பட்ட பொருள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குலுக்கவும். மாக்கல்லாயின் தூள் அல்லது மண் தூள்கள் தானாக அடியில் தங்கிவிடும். சுத்தமான பெருங்காயம் நீரில் கரையும் போதுமான வெள்ளை நிற கரைசலாகும். அது நெருப்பில் கொளுத்தினால் மஞ்சள் நிறத்தில் எரியும்.
முன் எச்சரிக்கை :
கூட்டுப் பெருங்காயத்தில் மாவுப் பொருள் இருப்பதால் ஒரு சிறிது கலங்கல் ஏற்படும் எனினும் சிறிது நேரத்தில் ஙீழே படிந்துவிடும்.
உணவுப் பொருளின் பெயர் : பெருங்காயம்
கலப்படப்பொருள் : மாவுப்பொருள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
பாலுக்குச் செய்த அதே சோதனையைத் தான் இதற்கும் செய்யவேண்டும்.
9.உணவுப் பொருளின் பெயர் : தேயிலை
கலப்படப்பொருள் :சாரமிறக்கிய பின் உள்ள பயனற்ற தேயிலை அல்லது நிறம் கூட்டப் பற்ற காய்ந்த இலை பருப்பின் தவிடு
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
1. இதனை ஈரமான ஒற்றுத்தாளில் சிறிதளவு தூவவும். செயற்கை நிறம் தானாக பிரிந்து விடும்.
2. வெண்மையான பீங்கான் ஓடு அல்லது கண்ணாடித் தகட்டின் மீது சிறிதளவு சுட்ட சுண்ணாம்புத்தூளைப் பரப்பவும். அதன்மேல் சிறிதளவு தேயிலைத் தூளை தூவவும். அப்போது சிவந்த நிறமோ ஆரஞ்சுநிறமோ அல்லது திரிந்த நிறத்திலான கலவையோ தோன்றுமானால் நிலக்கரித்தார் சாயமானது கலப்படம் செய்திருப்பதை உணரலாம். சுத்தமான தேயிலையில் பச்சையம் இருப்பதால் சாதாரண பசும்பொன்நிறம் மட்டுமே சிறிது நேரம் கழித்துத் தோன்றும்.
10.உணவுப் பொருளின் பெயர் : சர்க்கரை
கலப்படப்பொருள் : சாக்கட்டித்தூள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
சிறிதளவு மாதிரியை எடுத்து ஒரு கண்ணாடி டம்ளர் நீரில் கரைத்தால் சாக்கட்டித்தூள் அடியில் படிந்துவிடும்.
11.உணவுப் பொருளின் பெயர் : கரும் மிளகு
கலப்படப்பொருள் : பப்பாளிப்பழத்தின் உலர்ந்த விதைகள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : பப்பாளி விதைகள் முட்டை வடிவில் சுருங்கியவாறு பசும்பழுப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் தோற்றமளிப்பதால் பார்த்தவுடனேயே எளிதில் கண்டுபிடித்து விடலாம். மேலும் ஒரு கரு மிளகைக் கடித்தால் ஏற்படும் கார குணம் பப்பாளி விதையைக் கடித்தால் ஏற்படாததையும் கண்டு கொள்ளலாம்.
கலப்படப்பொருள் : சொத்தை மிளகு
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
எரிசாராயத்தின் (ஸ்பிரிட்) மேல் சொத்தை மிளகு மிதக்கும்.
12.உணவுப் பொருளின் பெயர் : மஞ்சள் தூள்
கலப்படப்பொருள் : நிறமேற்றப்பட்ட மரத்தூள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு சோதனைக்குழாயில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளவும். அதில் சில துளிகள் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை விடவும். உடனே நீல நிறம் தோன்றி அது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தால் அந்த மஞ்சள் தூள் சுத்தமானது என்று பொருள். நிறம் மாறாமல் மஞ்சளாகவே தோற்றமளித்தால் அனுமதிக்கப்படாத செயற்கை சாயமான மெடானில் எல்லோ கலப்படம் செய்யப்பட்டிருப்பதை உணரலாம்.
முன் எச்சரிக்கை : இந்த ஆய்வு மெடானில் எல்லோ கலப்படத்திற்கு.
13.உணவுப் பொருளின் பெயர் :. மிளகாய்த்தூள்
கலப்படப்பொருள் : செங்கல்தூள், உப்புத்தூள் அல்லது முகப்பவுடர்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூளை போடவும். கலப்படத்தூளானால் சாயம் கரைந்து மேலாக வர செங்கல் தூள் ஙீழே படியும். மேலும் வீழ்படிவம் வெண்மையாகவும், வழுவழுப்பாகவும் காணப்பட்டால் சோப்புக்கல் தூள் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பது தெரியும்.
முன் எச்சரிக்கை : இந்த ஆய்வு மண் சம்பந்தப்பட்ட பொருட்கள் கலந்திருப்பதை கண்டுபிடிக்க மட்டுமே உதவும்.
கலப்படப்பொருள் : வண்ணம்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : கண்ணாடி டம்ளரில் சிறிதளவு மிளகாய்த்தூளை தூவ வேண்டும். வண்ணக்கலவை தானாக நிறம் பிரிந்து வரும். படிப்படியாக அந்த நிறம் குறைந்து விடும்.
14. உணவுப் பொருளின் பெயர் : காப்பித்தூள்
கலப்படப்பொருள் : சிக்கரி
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு டம்ளர் தண்ணீரில் இலேசாக காப்பித்தூளைத் தூவவும். காப்பித்தூள் தண்ணீரின் மேல் மிதக்கும். ஆனால் சிக்கரியோ ஒரு சில வினாடிகளில் மூழ்கி விடும். சிக்கரியில் அதிக அளவு கருவெல்லச்சாயம் இருப்பதால் ஒருவித நிறத் தொடர்ச்சி காணப்படும்.
கலப்படப்பொருள் : புளியங்கொட்டை, பேரீச்சங்கொட்டைத்தூள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகத்துக்கு இடமான காப்பித்தூளை ஒரு வெள்ளை மையொற்றுத் தாளின் மீது இலேசாக தூவி அதன் மேல் நீர் தெளிக்கவும். புளியங்கொட்டை அல்லது பேரீச்சங்கொட்டைதூள் கலந்திருந்தால் ஒற்றுத்தாள் சிவப்பு நிறமாக மாறிவிடும்.
15. உணவுப் பொருளின் பெயர் : தூள் வெல்லம், வெல்லம்.
கலப்படப்பொருள் : சலவை சோடா
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகப்படும் தூள்வெல்லத்தின் மீது ஒரு சில துளிகள் ஹைட்ரோகுளோரிக் அமிலம் விடவும். நுரைத்து வந்தால் கலப்படம் நடந்துள்ளது என உணரலாம்.
கலப்படப்பொருள் : சாக்கட்டித்தூள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
ஒரு டம்ளர் தண்ணீரில் இரு தேக்கரண்டி வெல்லத்தூளை விட்டுக் கலக்கவும். சாக்கட்டித்தூள் கிழே படிந்துவிடும்.
16 . உணவுப் பொருளின் பெயர் : ரவை
கலப்படப்பொருள் : இரும்புத்தூள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகப்படும் ரவையினுள் ஓரு காந்தத்தை எடுத்துத் தூவினால் அதில் இரும்புத்தூள் தானாக ஒட்டிக் கொள்ளும்.
17. உணவுப் பொருளின் பெயர் :அரிசி
கலப்படப்பொருள் : சலவைக்கற்கள் மற்றும் இதர கற்கள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
உள்ளங்கையில் சிறிது அரிசியை வைத்து கையை சிறிது சிறிதாக நீரில் அமிழ்த்தினால் கற்கள் நீரில் மூழ்கிவிடும். அரிசி மிதக்கும்.
18. உணவுப் பொருளின் பெயர் :. கோதுமை மாவு (மைதா)
கலப்படப்பொருள் : மைதா மற்றும் ரவை எடுத்துவிட்டபின் உள்ள ஆட்டா
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
இப்படிப்பட்ட மாவினால் சப்பாததி தயாரிக்க அதிக நீர் விட்டு பிசைய வேண்டியிருக்கும். இதில் சப்பாத்தி தயாரித்தால் சற்று இறுகலாக இருக்கும். சுத்தமான மாவில் தயாராகும் சப்பாத்தி சிறிதளவு இனிப்பாக இருக்கும். ஆனால் கலப்பட மாவில் தயாரிக்கும் சப்பாத்தி சுவையற்றதாக இருக்கும்.
19. உணவுப் பொருளின் பெயர் : சாதாரண உப்பு
கலப்படப்பொருள் : வெள்ளைக்கல்லின் தூள் மற்றும் சாக்கட்டி போன்றவை
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சாதாரண உப்புத்தூளைக் கலக்கவும். சாக்கட்டி கலந்திருந்தால் அந்த நீர் வெள்ளை நிறமாவதோடு மற்ற அசுத்தமான பொருட்கள் கிழே படிந்துவிடும்.
20. உணவுப் பொருளின் பெயர் : தேன்
கலப்படப்பொருள் : சர்க்கரைப்பாகு (தண்ணீரும சர்க்கரையும் கலந்தது)
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
கொஞ்சம் பருத்தி திரியை சுத்தமான தேனில் நனைத்து தீக்குச்சியால் பற்ற வைத்தால் அது தீப்பிடித்து எரியும். கலப்படத் தேனாக இருந்தால் அது எரியாது. அப்படியே எரியத்துவங்கினாலும் பட் பட் என வெடிச்சத்தத்துடன் எரியும்.
முன் எச்சரிக்கை : ஈரம் கலந்த தேனுக்கு மட்டுமே இந்த ஆய்வு.
21. உணவுப் பொருளின் பெயர் : சீரகம்
கலப்படப்பொருள் :கரித்தூள் பூசிய புல் விதைகள், குப்பைக்ஙீரை விதைகள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
விரல்களால் கசக்கிப் பார்த்தால் விரலில் கரி படிந்தால் கலப்படம் என முடிவு செய்துவிடலாம்.
22. உணவுப் பொருளின் பெயர் : கடுகு
கலப்படப்பொருள் : மாவுப்பொருள், நாய்கடுகு, காட்டுச்செடி விதைகள்.
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
கடுகு மேற்பரப்பு வழவழப்பாக இருக்கும். நாய் கடுகு போல் சொறப்பாகவும், மிகக் கறுப்பாகவும் இருக்கும். நிற வித்தியாசம் கூர்ந்து நோக்கினால் தெரியும்.
23. உணவுப் பொருளின் பெயர் : தானியங்கள், கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு.
கலப்படப்பொருள் :நச்சுத்தன்மையுடைய காளான் விதைகள் (எர்காட்)
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
செந்நிற கருப்பு கலந்த நீண்ட தானியங்கள் சோளத்தில் இருந்தால், கலப்படம் இருபது சதவீதம். உப்புத்தண்ணீரில் தானியங்களைப் போட காளான் வகை தானியம் மிதக்கும். நல்ல தானியங்கள் நீரின் அடியில் படியும்.
24. உணவுப் பொருளின் பெயர் : கிராம்பு
கலப்படப்பொருள் :எண்ணெய் எடுத்த கிராம்பு
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
எண்ணெய் எடுத்த கிராம்பு சுருங்கிப் போய் இருக்கும்.

உணவே உயிர்

உணவே உயிர். இதை நிரூபிக்க தேவையில்லை. நாம் கண்கூடாக காணும், உணரும் ஒரு உண்மை இது.
மக்களின் உணவுப் பழக்கங்கள் ஒரு நாளில் தோன்றியவையல்ல. படிப்படியாக மாற்றம் அடைந்தவை. 1570ம் ஆண்டில் ஸ்பானியரிகள் தென் அமெரிக்காவிலிருந்து உருளைக்கிழங்கை கொண்டுவந்தனர். அது ஜரோப்பியா முழுவதும் பரவியது. ஆனால் சுமார் 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் உருளைக்கிழங்கை விஷமுள்ளது என்று கருதி, உபயோகிக்கவே இல்லை. இப்போது உருளைக்கிழங்கு இல்லாத உணவு இல்லை. இதே போல் தக்காளியும் விஷமென்று ஒதுக்கப்பட்ட காலமும் உண்டு. மீனையே அதிகமாக உண்டு வந்து ஜப்பானியர்கள் இப்போது இதர இறைச்சி உணவுகளையும் தங்கள் உணவில் சேர்த்துக்கொண்டு வருகின்றனர். இதனால் சாதாரணமாக குள்ளமான ஜப்பானியர்கள், இப்போது நல்ல உயரமாக வளர ஆரம்பித்திருக்கின்றனர்.
சத்துணவு விஞ்ஞானம் தற்போது மிகவும் முன்னேறிவிட்டது. வயதுக்கேற்ப, வியாதிக்கேற்ப, பல உணவு முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இதிலும் ஆயுர்வேதம் உணவு முறை மாற்றங்கள் சத்துணவு விவரங்கள் போன்றவற்றை விளக்கி விவரிக்கிறது. தூய்மையான உணவால் தூய்மையான மனது கிடைக்கும். ஆயுர்வேதத்தின் படி, தினமும் இரண்டு சுழற்சிகள், கப, பித்த, வாயு தோஷங்களுடன் எற்படுகின்றன.

முதற் சுழற்சி
காலை 6 மணி – 10 மணி – கபத்தின் நேரம்.
10 மணி – பிற்பகல் 2 மணி – பித்தம்
2 மணி – 6 மணி – வாதம்
இரண்டாம் சுழற்சி
சாயங்காலம் – 6 மணி – 10 மணி – கபம்
இரவு    - 10 மணி – 2 மணி – பித்தம்
2 மணி – 6 மணி – வாதம்

காலையில் எழுந்திருப்பது வாத சமயத்தில் நேர்ந்தால் நல்லது. ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது மலம் சுலபமாக வெளியேற உதவும். மத்தியான உணவை பகல் 12 மணியிலிருந்த 2 மணிக்குள் முடித்துவிட வேண்டும். ஏனென்றால் இந்த 2 மணி நேரம் பித்த நேரம். ஜீரணம் நன்கு ஆகும் வேளை. ஆயுர்வேதம் காலை உணவை விட, மதிய உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. மதிய உணவுக்கு பின் 100 அடி நடக்கவும். சில நிமிடங்கள் ‘பூனைத்’ தூக்கம் தூங்கலாம்! பகலில் உறங்குவது ஆயுர்வேதத்தின் படி நல்லதல்ல. இரவு உணவை 7 மணி அளவில் – அதாவது தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்பே முடித்துக் கொள்ள வேண்டும். சாப்பிட்ட பின் 10-15 நிமிடங்கள் நடக்கவும் இரவு உணவு மதிய உணவை விட ‘லகு’ வாக (குறைவாக) இருக்க வேண்டும். ஆயுர்வேதத்தின் படி உணவு, காலம் (ஸீஸன்), உண்பவர் வசிக்கும் தேசம், இடம் போன்றவற்றை பொருத்தது.
ஆயுர்வேதத்தின் படி, உணவை தேர்ந்தெடுக்க 8 விதிகள்.

1. உணவுப் பொருட்களின் இயற்கையான தன்மை. ஏற்கும் உணவு எத்தகையது? கீழ்க்கண்டவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்
• உணவு லகுவானதா (அரிசி, சாறுள்ள பழங்கள்)
• கனமான உணவா (மாவிலானவை, கிழங்கு போன்றவை)
• உஷ்ண உணவா (சுக்கு, மிளகு, மிளகாய்)
• சீத (குளிர்ச்சி) உணவா (தயிர் போன்றவை).
உங்களின் உடலுக்கு ஏற்றவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

2. சமைத்த முறை
சமைக்கும் போது ஏற்படும் மாறுதல்களை கவனிக்க வேண்டும். அதிக எண்ணையில் தயாரிக்கப்பட்டவைகளை தவிர்க்க வேண்டும். எந்தெந்த வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. என்று கவனிக்க வேண்டும். தயிர், மோர் இவற்றை சூடாக்கக் கூடாது. ஊறுகாய்களை உணவோடு சேர்த்து சூடு செய்யக்கூடாது.

3. கலந்த பொருட்கள்- இரண்டு இரண்டுக்கு மேற்பட்ட பொருட்கள் கலக்கப்பட்டிருந்தால், கூட்டுப் பொருட்கள் என்ன வென்று கவனிக்க வேண்டும். வெல்லமும் நிலக்கடலையும், பலாப்பழமும் தேனும் போன்ற சேர்க்கைகள் நல்லவை. தேனும் நெய்யும் சேர்த்தால் கேடு விளைவிக்கும்.
சேர்க்கக்கூடாத கலவைகள்
பாலுடன்
தயிருடன்
தக்காளி, உருளைக்கிழங்கு, மிளகாய், கத்திரிக்காய் இவற்றுடன்   முட்டையுடன்
எலுமிச்சம் பழம்
உப்பு, மாம்பழம், வாழைப்பழம், மீன், மாமிசம், தர்பூசணி முலாம் பழங்கள், சாத்துக்குடி, ஆரஞ்ச்
பால், சூடான உணவுகள், சீஸ், மீன், மாமிசம், தர்பூசணி, முலாம் பழங்கள்.
வெள்ளிரிக்காய், பால், தயிர்
பால், மாமிசம், முலாம், தர்பூசணி பழங்கள், மீன் வாழைப்பழம்.
தயிர், தக்காளி, பால், டீ, வெள்ளரிக்காய்

4. அளவு- சாப்பிட வேண்டிய அளவை வயிறுதான் நிர்ணயிக்கும். அளவாக சாப்பிடுதல் நல்லது.
5. உணவு விளையும் பிரதேசம்
ஒரு தேசத்தில் விளையும் உணவு, வேறு தேசத்தவர்க்கு ஒத்து வராது. சில இடங்கள் சில உணவுகளுக்கு பிரசித்தமானவை.

6. உணவுப்பொருட்களை வாங்கும் பருவம், உபயோகிக்கும் பருவம்
ஆயுர்வேத நூல்கள் இதை இரண்டுவிதமாக கூறுகின்றன. புதிய அரிசியை விட, 1 வருடம் வரை பழைமையான அரிசி நல்லது. அதாவது சில உணவுப் பொருட்களை சில காலம் வைத்து “பழையதாக” மாற்ற வேண்டும். சமைத்த உணவை ஒரு நாளின் எந்த நேரங்களில் உண்ண வேண்டும். என்பதும் ஆயுர்வேதம் சொல்கிறது. உதாரணமாக, கீரை தயிர் இவற்றை இரவில் உண்ணுவதில்லை. அந்தந்த ஸீஸன்களுக்கு ஏற்ற உணவை உட்கொள்ள வேண்டும். தவிர உண்ணும் உணவு வயதுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

7. உண்ண வேண்டிய சமயம்- முதலில் உண்ட உணவு ஜீரணமான பிறகே
அடுத்த உணவை உட்கொள்ள வேண்டும்.

8. உணவு உண்பவரின் நிலை- அவரவரின் உடல்வாக்கு தகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என்ற பழமொழி உண்டு. ஒருவரின் ரொட்டி, மற்றொருவருக்கு விஷமாகும்.
இது தவிர உணவில் அறுசுவைகளும் இருக்க வேண்டும் என்கிறது
ஆயுர்வதேம். இந்த அறு சுவைகள் – இனிப்பு, புளிப்பு, உப்பு, துவர்ப்பு, கசப்பு, உரைப்பு.
உணவு உண்ணும்போது

1. கை, கால்களை சுத்தமாக கழுவிய பின்பே உணவு உட்கொள்ள அமரவும்
2. முன்பு உட்கொண்ட உணவு ஜீரணமான பின்பே அடுத்த உணவை உட்கொள்ள வேண்டும். வயிறு காலியாகிருக்க வேண்டும். மலஜலம், சிறுநீர் கழித்தல் இவை முடிந்திருக்க வேண்டும்.
3. இனிப்பு, பழங்கள் இவற்றை முதலிலும், உப்பு, புளிப்பு நிறைந்த உணவுகள் அடுத்ததாகவும், பின்னர் கசப்பு, துவப்பு, உரைப்பு உள்ள உணவுகளை கடைசியாகவும் உண்ண வேண்டும். முதல் கவளத்தை நெய்யுடன் கலந்து சாப்பிட வேண்டும்.

4. உணவை நாவில் உமிழ்நீருடன் சேர்ந்து, நன்றாக மென்று விழுங்க வேண்டும்.
5. குளிர்ந்த பானங்களை உணவுக்கு முன்போ, இல்லை உண்ணும் போதோ குடிக்க வேண்டாம். தண்ணீரையும் அதிகமாக குடிக்காமல், மிகக் குறைந்த அளவில், உணவின் நடுவே குடிக்கலாம். சில ஆயுர்வேத வைத்தியர்கள் சாப்பிட்ட பிறகே நீர் குடிக்க வேண்டும் என்கின்றனர்.
6. அதிக கார உணவுகள் பலவீனத்தை உண்டாக்கும். குளிர்ந்த, உலர்ந்த உணவுகள் ஜீரணத்தை தாமதப்படுத்தும். அதிசூடான உணவு வயிற்றை பாதிக்கும்.

7. டி.வி. பார்த்துக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, சாப்பிடாதீர்கள். கோப, தாபங்களும் வேண்டாம்.
8. உணவு முடிந்தவுடனே பழங்களை சாப்பிட வேண்டாம். வாய்வு, உப்புசத்தை உண்டாக்கும். ஒன்றிரண்டு மணி நேரத்திற்கு பிறகு பழங்களை சாப்பிடலாம். இல்லை உணவுக்கு ஒரு மணி முன்பு சாப்பிடலாம்.

9. உணவிற்குபின் ஒரு முஹ§ர்த்தம் (45 நிமிடம்) வரை கடின வேலைகளில் ஈடுபடக்கூடாது. ஓய்வு தேவை.
வயிற்றின் நான்கின் 2 பகுதியில் அன்னத்தையும் (திட உணவு), 1 பகுதியில்
திரவஉணவையும், நிரப்ப வேண்டும். மீதி ஒரு பகுதியை காலியாக விட வேண்டும்.
பசியறிந்து உண்ணவும், பசி எடுத்தால் உண்ணவும்.
பசியுடன் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. ஏன்? பசித்தால் வயிற்றுக்கு உணவு வருமுன்பே “வேகஸ்” நரம்பு மூலமாக, மூளை வழியே, உணவு வரப்போவதை வயிற்றுக்கு தெரிவிக்கும். அடுத்த விநாடியில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்க ஆரம்பித்துவிடும். சாதாரணமாகவே, ஒரு மணிக்கு ஒரு தடவை, வயிற்றில் சிறிது அமிலம் சுரக்கும். வயிறு காலியாக இருந்தால், அமிலம் வயிற்று, குடல் சுவர்களை ‘பதம்’ பார்த்துவிடும். அல்சர் புண்களை உண்டாக்கும்.
எனவே சரியான உணவுகளை சரியான சமயத்தில் உட்கொள்வது அவசியம். காலையில் எழுந்தவுடன் 2 மணி நேரத்திற்குள் காலை உணவை எடுத்துக் கொள்வது வயிற்றுக்கு நல்லது. மூளைக்கும் நல்லது. காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் நடுவில் ‘சிற்றுண்டி’ தேவைப்பட்டால், பழங்கள், பழச்சாறு, பாப்கார்ன் (எண்ணை, வெண்ணை இல்லாதது), பாதாம் போன்றவைகளை சாப்பிடவும். மதிய உணவு தயிர், சாதம் இவற்றுடன் அதிக காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும். மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் நடுவே சிற்றுண்டி ஏதாவது சாப்பிடலாம். இனிப்பு, கேக் இவைகள் வேண்டாம்.
உணவு, முறை, மாற்றங்கள், ஆயுர்வேதம், உணவு முறை, சத்துணவு,
ஆயுர்வேத நூல்கள், உணவில், இனிப்பு, புளிப்பு, உப்பு, துவர்ப்பு, கசப்பு, உரைப்பு,
மலஜலம், சிறுநீர் கழித்தல், ஆயுர்வேத வைத்தியர்கள், கோபம், வாய்வு, வயிற்றுக்கு உணவு, வேகஸ் நரம்பு, மூளை, ஹைட்ரோ குளோரிக் அமிலம், அல்சர்,
உணவு முறை மாற்றங்கள் உணவே உயிர். இதை நிரூபிக்க தேவையில்லை. நாம் கண்கூடாக காணும், உணரும் ஒரு உண்மை இது. மக்களின் உணவுப் பழக்கங்கள் ஒரு நாளில் தோன்றியவையல்ல. படிப்படியாக மாற்றம் அடைந்தவை. 1570ம் ஆண்டில் ஸ்பானியரிகள் தென் அமெரிக்காவிலிருந்து உருளைக்கிழங்கை கொண்டுவந்தனர். அது ஜரோப்பியா முழுவதும் பரவியது. ஆனால் சுமார் 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் உருளைக்கிழங்கை விஷமுள்ளது என்று கருதி, உபயோகிக்கவே இல்லை. இப்போது உருளைக்கிழங்கு இல்லாத உணவு இல்லை. இதே போல் தக்காளியும் விஷமென்று ஒதுக்கப்பட்ட காலமும் உண்டு. மீனையே அதிகமாக உண்டு வந்து ஜப்பானியர்கள் இப்போது இதர இறைச்சி உணவுகளையும் தங்கள் உணவில் சேர்த்துக்கொண்டு வருகின்றனர். இதனால் சாதாரணமாக குள்ளமான ஜப்பானியர்கள், இப்போது நல்ல உயரமாக வளர ஆரம்பித்திருக்கின்றனர். சத்துணவு விஞ்ஞானம் தற்போது மிகவும் முன்னேறிவிட்டது. வயதுக்கேற்ப, வியாதிக்கேற்ப, பல உணவு முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இதிலும் ஆயுர்வேதம் உணவு முறை மாற்றங்கள் சத்துணவு விவரங்கள் போன்றவற்றை விளக்கி விவரிக்கிறது. தூய்மையான உணவால் தூய்மையான மனது கிடைக்கும். ஆயுர்வேதத்தின் படி, தினமும் இரண்டு சுழற்சிகள், கப, பித்த, வாயு தோஷங்களுடன் எற்படுகின்றன.முதற் சுழற்சிகாலை 6 மணி – 10 மணி – கபத்தின் நேரம். 10 மணி – பிற்பகல் 2 மணி – பித்தம் 2 மணி – 6 மணி – வாதம்இரண்டாம் சுழற்சிசாயங்காலம் – 6 மணி – 10 மணி – கபம்   இரவு    - 10 மணி – 2 மணி – பித்தம்    2 மணி – 6 மணி – வாதம் காலையில் எழுந்திருப்பது வாத சமயத்தில் நேர்ந்தால் நல்லது. ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது மலம் சுலபமாக வெளியேற உதவும். மத்தியான உணவை பகல் 12 மணியிலிருந்த 2 மணிக்குள் முடித்துவிட வேண்டும். ஏனென்றால் இந்த 2 மணி நேரம் பித்த நேரம். ஜீரணம் நன்கு ஆகும் வேளை. ஆயுர்வேதம் காலை உணவை விட, மதிய உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. மதிய உணவுக்கு பின் 100 அடி நடக்கவும். சில நிமிடங்கள் ‘பூனைத்’ தூக்கம் தூங்கலாம்! பகலில் உறங்குவது ஆயுர்வேதத்தின் படி நல்லதல்ல. இரவு உணவை 7 மணி அளவில் – அதாவது தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்பே முடித்துக் கொள்ள வேண்டும். சாப்பிட்ட பின் 10-15 நிமிடங்கள் நடக்கவும் இரவு உணவு மதிய உணவை விட ‘லகு’ வாக (குறைவாக) இருக்க வேண்டும். ஆயுர்வேதத்தின் படி உணவு, காலம் (ஸீஸன்), உண்பவர் வசிக்கும் தேசம், இடம் போன்றவற்றை பொருத்தது.ஆயுர்வேதத்தின் படி, உணவை தேர்ந்தெடுக்க 8 விதிகள்1. உணவுப் பொருட்களின் இயற்கையான தன்மை. ஏற்கும் உணவு எத்தகையது? கீழ்க்கண்டவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்• உணவு லகுவானதா (அரிசி, சாறுள்ள பழங்கள்)• கனமான உணவா (மாவிலானவை, கிழங்கு போன்றவை)• உஷ்ண உணவா (சுக்கு, மிளகு, மிளகாய்)• சீத (குளிர்ச்சி) உணவா (தயிர் போன்றவை).உங்களின் உடலுக்கு ஏற்றவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.2. சமைத்த முறைசமைக்கும் போது ஏற்படும் மாறுதல்களை கவனிக்க வேண்டும். அதிக எண்ணையில் தயாரிக்கப்பட்டவைகளை தவிர்க்க வேண்டும். எந்தெந்த வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. என்று கவனிக்க வேண்டும். தயிர், மோர் இவற்றை சூடாக்கக் கூடாது. ஊறுகாய்களை உணவோடு சேர்த்து சூடு செய்யக்கூடாது.3. கலந்த பொருட்கள்- இரண்டு இரண்டுக்கு மேற்பட்ட பொருட்கள் கலக்கப்பட்டிருந்தால், கூட்டுப் பொருட்கள் என்ன வென்று கவனிக்க வேண்டும். வெல்லமும் நிலக்கடலையும், பலாப்பழமும் தேனும் போன்ற சேர்க்கைகள் நல்லவை. தேனும் நெய்யும் சேர்த்தால் கேடு விளைவிக்கும்.சேர்க்கக்கூடாத கலவைகள்பாலுடன் தயிருடன் தக்காளி, உருளைக்கிழங்கு, மிளகாய், கத்திரிக்காய் இவற்றுடன்   முட்டையுடன் எலுமிச்சம் பழம்உப்பு, மாம்பழம், வாழைப்பழம், மீன், மாமிசம், தர்பூசணி முலாம் பழங்கள், சாத்துக்குடி, ஆரஞ்ச்பால், சூடான உணவுகள், சீஸ், மீன், மாமிசம், தர்பூசணி, முலாம் பழங்கள்.வெள்ளிரிக்காய், பால், தயிர்பால், மாமிசம், முலாம், தர்பூசணி பழங்கள், மீன் வாழைப்பழம்.தயிர், தக்காளி, பால், டீ, வெள்ளரிக்காய்4. அளவு- சாப்பிட வேண்டிய அளவை வயிறுதான் நிர்ணயிக்கும். அளவாக சாப்பிடுதல் நல்லது.5. உணவு விளையும் பிரதேசம்ஒரு தேசத்தில் விளையும் உணவு, வேறு தேசத்தவர்க்கு ஒத்து வராது. சில இடங்கள் சில உணவுகளுக்கு பிரசித்தமானவை.6. உணவுப்பொருட்களை வாங்கும் பருவம், உபயோகிக்கும் பருவம்ஆயுர்வேத நூல்கள் இதை இரண்டுவிதமாக கூறுகின்றன. புதிய அரிசியை விட, 1 வருடம் வரை பழைமையான அரிசி நல்லது. அதாவது சில உணவுப் பொருட்களை சில காலம் வைத்து “பழையதாக” மாற்ற வேண்டும். சமைத்த உணவை ஒரு நாளின் எந்த நேரங்களில் உண்ண வேண்டும். என்பதும் ஆயுர்வேதம் சொல்கிறது. உதாரணமாக, கீரை தயிர் இவற்றை இரவில் உண்ணுவதில்லை. அந்தந்த ஸீஸன்களுக்கு ஏற்ற உணவை உட்கொள்ள வேண்டும். தவிர உண்ணும் உணவு வயதுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.7. உண்ண வேண்டிய சமயம்- முதலில் உண்ட உணவு ஜீரணமான பிறகே  அடுத்த உணவை உட்கொள்ள வேண்டும்.8. உணவு உண்பவரின் நிலை- அவரவரின் உடல்வாக்கு தகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என்ற பழமொழி உண்டு. ஒருவரின் ரொட்டி, மற்றொருவருக்கு விஷமாகும்.இது தவிர உணவில் அறுசுவைகளும் இருக்க வேண்டும் என்கிறது ஆயுர்வதேம். இந்த அறு சுவைகள் – இனிப்பு, புளிப்பு, உப்பு, துவர்ப்பு, கசப்பு, உரைப்பு.உணவு உண்ணும்போது 1. கை, கால்களை சுத்தமாக கழுவிய பின்பே உணவு உட்கொள்ள அமரவும்2. முன்பு உட்கொண்ட உணவு ஜீரணமான பின்பே அடுத்த உணவை உட்கொள்ள வேண்டும். வயிறு காலியாகிருக்க வேண்டும். மலஜலம், சிறுநீர் கழித்தல் இவை முடிந்திருக்க வேண்டும்.3. இனிப்பு, பழங்கள் இவற்றை முதலிலும், உப்பு, புளிப்பு நிறைந்த உணவுகள் அடுத்ததாகவும், பின்னர் கசப்பு, துவப்பு, உரைப்பு உள்ள உணவுகளை கடைசியாகவும் உண்ண வேண்டும். முதல் கவளத்தை நெய்யுடன் கலந்து சாப்பிட வேண்டும்.4. உணவை நாவில் உமிழ்நீருடன் சேர்ந்து, நன்றாக மென்று விழுங்க வேண்டும்.5. குளிர்ந்த பானங்களை உணவுக்கு முன்போ, இல்லை உண்ணும் போதோ குடிக்க வேண்டாம். தண்ணீரையும் அதிகமாக குடிக்காமல், மிகக் குறைந்த அளவில், உணவின் நடுவே குடிக்கலாம். சில ஆயுர்வேத வைத்தியர்கள் சாப்பிட்ட பிறகே நீர் குடிக்க வேண்டும் என்கின்றனர்.6. அதிக கார உணவுகள் பலவீனத்தை உண்டாக்கும். குளிர்ந்த, உலர்ந்த உணவுகள் ஜீரணத்தை தாமதப்படுத்தும். அதிசூடான உணவு வயிற்றை பாதிக்கும்.7. டி.வி. பார்த்துக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, சாப்பிடாதீர்கள். கோப, தாபங்களும் வேண்டாம்.8. உணவு முடிந்தவுடனே பழங்களை சாப்பிட வேண்டாம். வாய்வு, உப்புசத்தை உண்டாக்கும். ஒன்றிரண்டு மணி நேரத்திற்கு பிறகு பழங்களை சாப்பிடலாம். இல்லை உணவுக்கு ஒரு மணி முன்பு சாப்பிடலாம்.9. உணவிற்குபின் ஒரு முஹ§ர்த்தம் (45 நிமிடம்) வரை கடின வேலைகளில் ஈடுபடக்கூடாது. ஓய்வு தேவை.
வயிற்றின் நான்கின் 2 பகுதியில் அன்னத்தையும் (திட உணவு), 1 பகுதியில் திரவஉணவையும், நிரப்ப வேண்டும். மீதி ஒரு பகுதியை காலியாக விட வேண்டும்.பசியறிந்து உண்ணவும், பசி எடுத்தால் உண்ணவும். பசியுடன் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. ஏன்? பசித்தால் வயிற்றுக்கு உணவு வருமுன்பே “வேகஸ்” நரம்பு மூலமாக, மூளை வழியே, உணவு வரப்போவதை வயிற்றுக்கு தெரிவிக்கும். அடுத்த விநாடியில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்க ஆரம்பித்துவிடும். சாதாரணமாகவே, ஒரு மணிக்கு ஒரு தடவை, வயிற்றில் சிறிது அமிலம் சுரக்கும். வயிறு காலியாக இருந்தால், அமிலம் வயிற்று, குடல் சுவர்களை ‘பதம்’ பார்த்துவிடும். அல்சர் புண்களை உண்டாக்கும். எனவே சரியான உணவுகளை சரியான சமயத்தில் உட்கொள்வது அவசியம். காலையில் எழுந்தவுடன் 2 மணி நேரத்திற்குள் காலை உணவை எடுத்துக் கொள்வது வயிற்றுக்கு நல்லது. மூளைக்கும் நல்லது. காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் நடுவில் ‘சிற்றுண்டி’ தேவைப்பட்டால், பழங்கள், பழச்சாறு, பாப்கார்ன் (எண்ணை, வெண்ணை இல்லாதது), பாதாம் போன்றவைகளை சாப்பிடவும். மதிய உணவு தயிர், சாதம் இவற்றுடன் அதிக காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும். மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் நடுவே சிற்றுண்டி ஏதாவது சாப்பிடலாம். இனிப்பு, கேக் இவைகள் வேண்டாம்.